Skip to content

தீட்டுத் துணி

அண்ணா சிறுகதைகள்

அறிஞர் அண்ணா எழுதிய தீட்டுத் துணி - அக்கால சமூகச் சிக்கல்கள், நாடக உலகம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்களைச் சித்தரிக்கும் சிறந்த சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 160
Year 2008
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் மிக முக்கியமான அரசியல் தலைவராகிய அண்ணாவின் நூற்றாண்டை ஒட்டி வெளிவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கும் அண்ணாவின் கதைகளில் இன்றைய வாசிப்பனுபவத்துக்கு இயைந்து வரும் பதினான்கு கதைகள் இதில் உள்ளன. 'அண்ணாவின் கதைகளைக் கொண்டு அக்கால நாடக உலகம், மேடைப் பேச்சு விஷயங்கள், வணிகர்களின் நடைமுறைகள், தமது இறுதிகட்டத்தில் இருந்த  பரம்பரை நடவடிக்கைகள், பணக்காரர்களின் வழக்கங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் துயரங்கள் உள்ளிட்டவற்றை அறியலாம். அதற்கான தரவுகளாக இக்கதைகள் உள்ளன.  இக்கதைகள் எழுதப்பட்ட காலத்துப் பெண்கள் நிலை இவற்றில் இடம் பெறுவதோடு பெண்கள் தொடர்பான அண்ணாவின் கருத்துகளையும் தருவிக்கலாம்' என்று தம் விரிவான முன்னுரையில் குறிப்பிடுகிறார் பெருமாள்முருகன்.