Skip to content

பகல் தண்டவாளத்தில் ரயில்

சோலைக்கிளி எழுதிய பகல் தண்டவாளத்தில் ரயில் - சமூக, தனிமனித வாழ்வின் உண்மையைச் சந்தேகிக்கும் கவிதைகள். அனுபவங்கள் மற்றும் அறிவின் ஆழமான தேடல் கொண்ட படைப்பு.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 88
Year 2012
Format Paperback
Tags Philosophy and Thought

Description

நிலைத்திருக்கும் எல்லாவற்றின் பின்னும்  அது அரசியலாகவோ இலக்கியமாகவோ சமூக தனி மனித வாழ்வாகவோ இருக்கலாம்  உள்ள தோற்ற உண்மையை சந்தேகிக்கின்றன இந்தக் கவிதைகள். அனுபவமோ அறிவுரையோ அறவுரையோ எதுவாகவும் இருக்கலாம், அவற்றின் ஆழத்திலுள்ள நிஜத்தைத் தேடி ஆராய்கிறார் கவிஞர். இந்த இரண்டு நிலைகள் ஒன்றிணையும் புள்ளியில்தான் இந்தக் கவிதைகளின் உலகம் இயங்குகிறது. அந்த உலகம் எளிமையானது; அதே சமயம் பிரத்தியேகமானது. அந்த உலகில் கேட்கும் மொழி இயல்பானது; அதே சமயம் சிக்கலானது. எளிமையைச் சிக்கலானதாகவும் முரண்களை இயல்பானதாகவும் முன்வைப்பவர் சோலைக்கிளி.