காமத்திப்பூ
சுகிர்தராணி எழுதிய காமத்திப்பூ - காதல் கவிதைகள், காமத்தின் ஆழமான உணர்வுகளை சித்தரிக்கும் கவிதைத் தொகுப்பு. சமூகத்தையும் உலகையும் பிரதிபலிக்கும் படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Love and Romance |
Description
துளித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்திரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பிலும் தவித்தும் நிறைவு கண்டும் மனித உடல்கள் - ஆணும் பெண்ணும் - சஞ்சரிக்கின்றன. இந்த சஞ்சாரத்தில் பாலினம் ஒன்றிணைகிறது. இயற்கை மானுடத்துடன் சங்கமிக்கிறது. பொழுதுகள் பெண்ணின் பருவங்களாகின்றன. காதலையும் காமத்தையும் தனது பரிணாமத்தின் சூழலாக மாற்றிக்கொள்கிறது காலம்.
தன்னையும் தனது காலத்தையும் எழுதுவதன் மூலம், தான் சார்ந்திருக்கும் சமூகத்தையும் உலகையும் இந்தக் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் சுகிர்தராணி.