Skip to content

ஆதிரையின் கதசாமி

குழந்தைகளிடம் கதை சொல்ல ஒரு புத்தகம்

க. வை. பழனிசாமி எழுதிய ஆதிரையின் கதசாமி - குழந்தைகளுக்கான அழகான கதை, மனித உறவுகளின் ஆழம் மற்றும் பேரன்பை உணர்த்தும் சிறந்த புத்தகம்.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 112
Year 2016
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

நட்சத்திரங்களைப் பென்சில் டப்பாவில் எளிதாக அடக்கும் கதையாடல். கடவுளோடு விளையாடும் வெள்ளை மனம். பொம்மைகள் வாழும் தெருவில் கைபிடித்துக் கூட்டிப்போகும் அழகு. மனித அழுக்குகள் விலங்குகளின் மீது படியாமல் பார்த்துக்கொள்ளும் கவனம். ஆதிரையின் கதைக்குள் எதுவும் சாத்தியமாகும் அதிசயம். மண்ணிலும் விண்ணிலும் உள்ள அனைத்தும் அவள் கதைவெளியில் அலைகின்றன. உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுவான கதையை அவளால் சொல்ல முடிகிறது.  பூமியை ஒவ்வொரு நாளும் தன் கதைகளால் தூய்மைப்படுத்துகிற கதைசொல்லி ஆதிரை. உயிர்களையும் தாண்டி விரியும் பேரன்பு அவள் கதைமொழி.