Skip to content

ஆனந்தம் பண்டிதர்

சித்த மருத்துவரின் சமூக மருத்துவம்

ஆனந்தம் பண்டிதர் எழுதிய ஆனந்தம் பண்டிதர் - சித்த மருத்துவம், பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் சாதி அமைப்பு குறித்த ஆழமான ஆய்வை இந்நூல் வழங்குகிறது.

Category History
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 248
Year 2016
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பிரிட்டிஷ் - இந்தியா உருவாக்கப்பட்ட காலனியாட்சிக் காலத்தில் பல நூற்றாண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் இருந்துவந்த பன்மையான மருத்துவ முறைகள்மீது ஆயுர்வேதமும் அலோபதியும் அவற்றின் ஒற்றைத் தன்மையை நிறுவுவதற்கு எத்தனித்தன. இந்நிலையில் தமிழ்ச் சித்த மருத்துவத்தைப் பாதுகாப்பதற்காக அதன் அறிவுப் பாரம்பரியத்தைத் தான் வெளியிட்டு வந்த ‘மருத்துவன்’ மாத இதழ் ஊடாக எடுத்துரைத்த ஆனந்தம்பண்டிதரின் அறிவுச் செயல்பாட்டை ஆவணப்படுத்தியுள்ளது இந்நூல். சித்த மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த அவர், படிநிலைச் சாதிமுறையின் பாதகமான விளைவுகளை உணர்ந்து, உடல் சீக்குக்குப் போன்றே சாதிச் சீக்குக்கும் சிகிச்சை செய்த சிந்தனைகளையும் இந்நூல் முன்வைக்கிறது.