Skip to content

அந்த நேரத்து நதியில்…

நாவல், சிறுகதை மீதொரு உரையாடல்

க. வை. பழனிசாமி எழுதிய அந்த நேரத்து நதியில்... – நாவல், சிறுகதை குறித்த ஆழமான பார்வை மற்றும் வாசிப்பு அனுபவங்களை வழங்கும் சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 176
Year 2018
Format Paperback
Tags Philosophy and Thought

Description

வாசிப்பு என்பது ஒரு 'அந்தரங்கமான அனுபவம்' என்பதிலிருந்து 'அரசியல் செயல்பாடு' என்பதுவரை பலவிதமான கருதுகோள்கள் இலக்கிய விமர்சனத்தில் இருக்கின்றன. அவையெல்லாமே படைப்பை அணுக ஒரு குறிப்பிட்ட எல்லைவரை மட்டுமே உதவக் கூடும். அதன்பிறகு வாசகன் தனியாகவே பயணிக்க வேண்டும். அவ்வகையில், தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் பலரின் எழுத்துகளினின்றும் தான் பெற்ற வாசிப்பனுபவத்தை க. வை. இந்தக் கட்டுரைகளில் உவகையோடு விவரிக்கிறார். இவை அந்நூல்களைப்  பற்றிய மதிப்பீடாக மட்டும் நின்றுவிடாமல் நாவல், சிறுகதை பற்றிய அவரது பார்வையை முன்வைப்பதாகவும் அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு.