Skip to content

சினிமா கொட்டகை

தமிழ்த் திரைத்துறை சார்ந்த கட்டுரைகள்

தியடோர் பாஸ்கரன் எழுதிய சினிமா கொட்டகை - தமிழ்சினிமா வரலாறு, திரைப்பட விமர்சனம் மற்றும் சினிமா ஊடகத்தின் முக்கியத்துவத்தை ஆராய்கிறது.

Category Essay
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 136
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

“கல்விப் புலத்துக்கு வெளியேயும் சினிமா எனும் ஊடகத்தைப் பற்றிய அக்கறையின்மையை எல்லாத் தளத்திலும் நாம் காணலாம். ஒரு சமூகத்தின் சினிமாவிற்கு இயக்குநர், தயாரிப்பாளர் மட்டும் பொறுப்பல்ல; திரைப்படங்களைப் பற்றி எழுதுபவர்கள், சிந்திப்பவர்களுக்கும் பொறுப்பிருக்கின்றது.”

இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தமிழ்சினிமாவின் சில பரிமாணங்களை அவதானிக்கின்றன. அத்துடன் மௌன யுகத்தின் நிர்ப்பந்தங்கள் எவ்வாறு தமிழ்த்திரையின் அம்சங்களை உருவாக்கின; இந்திய, தமிழக வரலாறு ஒரு திரைக்கதைச் சுரங்கம் போன்றிருந்தாலும் வெகு சில வரலாற்றுப்படங்களே தமிழில் உருவாக்கம் பெற்றிருப்பது ஏன் போன்ற கேள்விகளையும் இந்நூல் எழுப்புகின்றது.