உடல் பால் பொருள்
பாலியல் வன்முறை எனும் சமூகச் செயற்பாடு
பெருந்தேவி எழுதிய உடல் பால் பொருள் - #MeToo இயக்கம், பாலியல் துன்புறுத்தல், பெண்ணியம் குறித்த முக்கியமான கட்டுரைகள். சமூக யதார்த்தங்களை அலசும் ஆழமான பெண்ணியப் பார்வை.
| Category | Essay |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | தமிழ் |
| Pages | 176 |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Gender and Equality |
Description
# MeToo இயக்கம் பற்றிப் பேசத் தொடங்கும் இந்தக் கட்டுரைகள், அந்த இயக்கத்தின் சமகாலச் சிக்கல்களுடன் நிற்காமல் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலின் பல்வேறு வெளிப்பாடுகள், பாலுறவில் பெண்ணின் சம்மதம், பால் அடையாளங்களின் உருவாக்கம் எனப் பல புள்ளிகளையும் தொட்டு விரிந்து செல்கின்றன. சுய சிந்தனை கொண்ட அசலான பெண்ணியப் பிரதி என்று இக்கட்டுரைகளைச் சொல்லலாம்.
கோட்பாட்டுப் புரிதலுடனும் சமூக யதார்த்தங்கள் குறித்த பிரக்ஞையுடனும் எழுதப்பட்ட காத்திரமான பெண்ணியக் கட்டுரைகளைத் தமிழில் மிக மிக அரிதாகவே காண முடிகிறது. அத்தகைய கட்டுரைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பு தமிழுக்கு மிக அவசியமான வரவு.
- அரவிந்தன்