Skip to content

தங்க நகைப் பாதை

மு. குலசேகரன் எழுதிய தங்க நகைப் பாதை - நவீன வாழ்வின் மறுபக்கத்தை நுணுக்கமான மொழியில் சொல்லும் சிறந்த நாவல். சமூக மாற்றங்கள், மனித உறவுகள் பற்றிய கதை.

Category Novel
Publisher காலச்சுவடு
Language தமிழ்
Pages 440
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

இருவழிச் சாலை நான்காகி, ஆறாகி, பின் அதிநவீனச் சாலையாக மாறும்போது மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களே மு. குலசேகரனின், ‘தங்கநகைப் பாதை’ நாவலின் மையம்.

அசாதாரணமான மனிதர்கள், நம்ப முடியாத நிகழ்வுகள், சாத்தியமற்ற செயல்கள் ஆகியவற்றால் நிரம்பியது இந்த நாவல். கற்பனை விதைப்பு, பொம்மைக் காவல், மிகை அறுவடை, பேய் உழைப்பு, தோல் குவியல் போன்றவை அதீதப் புனைவுச் சித்திரங்களாக உருப்பெறுகின்றன. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பாத்திரத்தின் மூலம் வெளிப்படுவது நாவலுக்குப் பன்முகப் பார்வையைத் தருகிறது.

எளிமையானதாகத் தோற்றமளிக்கும் குலசேகரனின் தெளிந்த கவித்துவ மொழி நுணுக்கமும் உருவகத்தன்மையும் கூர்மையும் கொண்டது. நவீன வாழ்வின் மறுபக்கம் குறித்த புனைவுகளில் முக்கியமான இடம்பெறத் தக்க நாவல் இது.