சீர்மை: அரசியல் விமர்சன நூல்கள் செட் #1
இந்திய அரசியலின் பேசப்படாத பக்கங்கள்
நாகூர் ரிஸ்வான் எழுதிய சீர்மை: அரசியல் விமர்சன நூல்கள் செட் #1 - இஸ்லாமோஃபோபியா, சிறுபான்மையினர் அரசியல் குறித்த ஆழமான விமர்சனங்கள் மற்றும் புதிய பார்வைகள் இதில் உள்ளன.
| Category | Essay |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | தமிழ் |
| Pages | 248 |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
1. மையநீரோட்டத்தில் இஸ்லாமோ ஃபோபியா
இஸ்லாமியப் பண்பாடும் அடையாளங்களும் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காலம் இது. முஸ்லிம்கள் குறித்த அச்சமும் தப்பெண்ணமும் குரோத மனப்பான்மையும் அதிகரித்து வருகின்றன. மட்டுமின்றி, அவர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கெல்லாம் அவர்களையே குற்றப்படுத்தும் போக்கும் நிலவுகிறது.
இந்நிலையில், முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்த விமர்சனங்களை அவர்களின் கண்ணோட்டத்திலிருந்தே முன்வைக்கிறது இந்நூல். சமுதாய அக்கறையுள்ள அனைவரும் அவற்றைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியது அவசியம்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆக்கங்கள் சமூகத்தில் நிறுவனமயமாகியிருக்கும் இஸ்லாமோ ஃபோபியாவின் வெளிப்பாடுகளைக் காத்திரமாக விசாரணை செய்கின்றன. பொதுப்புத்தியை, ஆதிக்கக் கருத்தியலை, பொதுநீரோட்டம் எனும் கருத்தமைவைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
முஸ்லிம் விவகாரங்களைப் புரிந்துகொள்ள முயல்வோர் அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது.
2. ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன?
இந்திய அரசியலின் பேசப்படாத பக்கங்கள்
ஜேஎன்யூ பல்கலையின் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஆற்றிய உரைக்காக ஐந்து மாநில அரசுகள் அவர் மீது தேச துரோகக் குற்றம்சாட்டி சிறையில் அடைத்திருக்கின்றன. அவ்வளவு ‘அபாயகரமாக’ அவர் பேசியது என்ன?
பெரும்பான்மைவாத ஜனநாயகத்தில் சிறுபான்மையினரின் இருப்பு, இந்திய வரலாற்று எழுத்தியலில் நிலவும் பக்கச்சார்பு, மையநீரோட்ட மதச்சார்பற்ற கட்சிகளிடமுள்ள சிக்கல்கள் உள்ளிட்ட பல அம்சங்களை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள ஷர்ஜீல் இமாமின் உரையும் எழுத்துகளும் விவாதிக்கின்றன. காத்திரமான மாற்றுப் பார்வைகளை அவை முன்வைப்பதுடன், கல்விப்புல விவாதங்களை மக்கள்மயப்படுத்துகின்றன.
இன்றைய முஸ்லிம் அரசியல் தொடர்பான பல முக்கியமான விவாதங்களுக்கு இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கும்.