குவா…குவா…குவா…குஞ்சுவாத்து பிங்
உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை
மர்ஜோரி ப்ளேக் எழுதிய குவா...குவா...குவா...குஞ்சுவாத்து பிங் - யங்கட்ஸ் நதியில் வாத்து குடும்பத்தின் அழகான கதை! குஞ்சுவாத்து பிங் சாகசங்கள் குழந்தைகளை மகிழ்விக்கும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 31 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
சீன நாட்டின் யங்கட்ஸ் நதியில் உள்ள படகுகளில் ஒன்றுதான் நம்முடைய குஞ்சுவாத்து பிங் குடியிருக்கும் வீடு. அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள்,அத்தைகள், மாமாக்கள், அவர்களது பிள்ளைகள் என பல வாத்துகள் குஞ்சுவாத்துக்குத் துணை. படகு வீட்டில் ஒரே குதூகலமும் கொண்டாட்டமும்தான். எஜமானின் தண்டனைக்கு பயந்து தனிமையாகிறது குஞ்சுவாத்து பிங் வாழ்க்கையை சாமர்த்தியமாக எதிர்கொள்ளும் கதைதான் இது. குஞ்சுவாத்து பிங்குடன் பழக சீன நாட்டு யங்கட்ஸ் நதிக்கரைக்குப் போலாமா, பிள்ளைகளே!