Skip to content

கடவுள் ஆயினும் ஆக

சங்கச்சுரங்கம் - முதலாம் பத்து

ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய கடவுள் ஆயினும் ஆக - சங்க இலக்கியம் மற்றும் கீழடி நாகரிகம் குறித்த புதிய புரிதல்களை வழங்கும் ஒரு முக்கியமான புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

நாம் இதுவரை பார்த்த எல்லாவற்றையும் வேறொன்றாகப் பார்க்க வைக்கிற பாலா சாரின் தொடர்முயற்சிகளின் இன்னொரு பரிமாணம்தான் இந்தச் சங்கச் சுரங்கம்.

“சங்க இலக்கியம் என்பது ஹரப்பா, மொகெஞ்சதரோ பற்றிய மீள்நினைவாக இருக்கலாம், கீழடியில் இருந்த நகர நாகரிகத்தின் நேரடிப் பதிவாக இருக்கலாம்” என்கிற கருத்து இந்தியத் துணைக்கண்டத்தை, சங்க இலக்கியம் இல்லாமல் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்னும் அரிய முன்வைப்புக்கு அடித்தளமாகிறது.

இந்த முதல் பத்தின் ஒவ்வொரு உரையும், உரையின் இறுதியில் சுரங்கத்திலிருந்து அரங்கத்திற்கு என அவர் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் ஒவ்வொரு பாடலும், அப்பாடலை முன்னிறுத்தி அவர் நிகழ்த்தும் உரையாடலும் சங்க இலக்கியத்தின் வழி நம் சமகாலத்தை மறுவாசிப்புச் செய்ய உதவுகின்றன.

– ச.தமிழ்ச்செல்வன்