Skip to content

கைரதி 377

மாறிய பாலினரின் மாறாத வலிகள்

அழகிய பெரியவன் எழுதிய கைரதி 377 - திருநர்களின் வாழ்வியல், காதல், உரிமைகள் மற்றும் சமூகப் போராட்டங்களை உணர்வுப்பூர்வமாகப் பேசும் கதைத்தொகுப்பு.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

திருநர்களின் வாழ்வியல் கூறுகள், உடலியல், உணர்வியல் வெளிப்பாடுகள், நிராகரிப்பின் வலிகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றை பேசுகிற அதே நேரத்தில் இந்தக் கதைகள் அவர்களின் காதலையும் உரிமைகளுக்கான போராட்டங்களையும் கல்வியில் வேலை வாய்ப்புகளில் வாழ்நிலையில் சமூகநிலையில் அவர்கள் மேலெழுந்து வருவதையும் சரியாகப் பேசுகிறது. இத்தொகுப்பு திருநர் இலக்கியத்தின் புதிய முகம். புதிய தொடக்கம். புதிய பாய்ச்சல் எனலாம்.

அன்றாட வாழ்வில் மாற்றுப் பாலினர் சந்திக்கும் வெவ்வேறு சிக்கல்களை துல்லியமாகப் பேசும் இக்கதைகள் சில இடங்களில் நம்மைப் பிடித்து உலுக்குகின்றன. மாற்றுப்பாலினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளைச் சொல்கின்ற கதைகளாகவும், பொதுச்சமூகம் எந்தெந்த நிலைகளில் அவர்களைத் தம்முடன் இணைத்துக் கொள்வதற்கு தவறியிருக்கிறது என்பதைப் பேசும் கதைகளாகவும் பகுக்கலாம் – அழகிய பெரியவன்