Skip to content

ஔடதம்

சரோஜினி விபோகன் எழுதிய ஔடதம் - அகதி முகாம்களின் வலியைத் தாண்டி காதல், இழப்பு, உறவின் ஏக்கத்தை கவிதைகளாக்கும் தொகுப்பு. நிலம் மற்றும் அகதி இலக்கியம் பற்றிய நுண்ணறிவு.

Category Poetry
Publisher சிந்தன் புக்ஸ்
Language தமிழ்
Pages 100
Year 2025
Format Paperback
Tags Life and Society

Description

"கவிஞர் சரோஜினி விபோகன் கவிதைகள் என்பவை அக உணர்வுகளைச் சார்ந்தவை, காதலுக்கும், உறவுக்கும், அன்புக்குமானவை அவை... என்ற வாசிப்பு உணர்தல் நமக்கு வாசிக்கும் ஒவ்வொரு கவிதையிலும் உணரலாம். ஆனால் இந்த வரிகள் உருவாகியிருக்கும் இடம்தான் நாம் இன்னும் தேடிப்பார்க்க வேண்டிய இடமாக உள்ளது. முகாமில் அடைக்கப்பட்ட பெட்டிகளுக்குள் இருந்து ஒரு உயிர் காதலிப்பதை, காதலித்துப் பிரிவதை, உறவை ஏங்குவதை, இழப்பை சந்திப்பதை, காயத்தை வருடுவதை சரோஜினி விபோகன் கவிதைகளாக்கி இருக்கிறார். முகாம் என்ற வார்த்தையும் பாடுகளும் வார்த்தைகளில் இல்லையே தவிர, கவிஞர் எதிரொலிக்கும் ஒவ்வொரு வார்த்தைக்களுக்குப் பின்னரும் அது எதிரொலிக்கின்றது என்பதை யாரும் மறக்க வேண்டாம். கவிஞர் சரோஜினி அகதி இலக்கியத்தின் ஒரு முகம். இக்கவிதைத் தொகுப்பு காதலோடு, நிலம் கொண்ட தவிப்பு."

- அ.சி.விஜிதரன்