Skip to content

மதிப்புரைகளும் முன்னுரைகளும்

க. பஞ்சாங்கம் எழுதிய மதிப்புரைகளும் முன்னுரைகளும் - இலக்கிய விமர்சனம், வாசிப்பு அனுபவம் மற்றும் கி.ரா. படைப்புகள் குறித்த ஆழமான நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.

Category Essay
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Philosophy and Thought

Description

"இலக்கியக் கல்வி, இலக்கிய வாசிப்பு என்பன கடும் உழைப்பைக் கோருவன; கேள்விமேல் கேள்வி கேட்டுத் தீர்க்கமான எந்த விடையையும் மேற்கொள்ளாமல் எப்பொழுதும் பாம்புப்படம் போல் வினாக் குறிபோடேயே வாழ்கின்ற ஒரு வாழ்க்கை முறைக்கு நம்மை இட்டுச் செல்வதன் மூலம், எப்படியோ கிடைத்த இந்த அரிய மனித வாழ்வைப் பன்மடங்குத் தீவிரமாக அனுபவித்தும் உணர்ந்தும் வாழ்ந்துவிட்டுப் போவதற்கான பெருவெளியைக் காட்டுவன."

"வாசகன். ரசிகன், சஹ்ருதையன் என்று மூன்று வகையான படிப்பாளிகள் உண்டு; வாசகன், ரசிகன் எல்லாம் எழுத்தாளர்களைக் குறித்த பிம்பங்களைக் கட்டமைத்துச் சந்தையில் அவர்கள் நூல்களை விற்பதற்குத்தான் பயன்படுவார்கள். ஆனால் சஹ்ருதையன் அப்படி அல்ல; அவனும் படைப்பாளி போல் படைப்பு மனம் கொண்டலன்: படைப்பாளி போலவே பிறப்பிலேயே அப்படிப்பட்டவன்; அவள்தான் படைப்பில் உருவாகிக் கிடக்கும் மௌனங்களைச் சப்தமாகப் பேசுகிறவன்: இடைவெளிகளை நிரப்புகிறவன். நீங்கள் கி.ரா.வுக்கு இதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றார்; அப்பொழுதுதான் அவர் என்னுடைய "மறுவாசிப்பில் கி.ராஜநாராயணன்" நூலை வாசித்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.