Skip to content

ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே

நலங்கிள்ளி எழுதிய ஏ! கல்வியில் தாழ்ந்த தமிழகமே - தமிழகக் கல்விச் சிக்கல்களும், முன்னேற்றத்திற்கான வழிகளும் இந்நூலில் அலசப்படுகின்றன. சமூக நீதிக்கான சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 80
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

கல்வித் துடிப்பிருந்தும் தெளிவில்லாது தடுமாறும் தமிழ்ப் பெற்றோர், கல்விக் கொள்கையா கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலையிலிருக்கும் அரசினர் அதிகார வர்க்கத்தினர், துறைதோறும் தாழ்வுற்று வறுமை மிஞ்சிய தமிழகத்தை மீட்டுயர்த்தப் போராடும் தமிழ் தேசியர்கள், சாண் ஏறினால் முழம் சறுக்குவது ஏனென்று தெரியாமல் திகைப்புறும் சமூக நீதிக்காரர்கள், மதிப்பிற்குறிய ஆசிரியப் பெருமக்கள் அத்தனை பேரும் இந்நூலைக் கசடறக் கற்றுத் தெளிந்தால் கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை மீளக் காண்பதற்குத் தத்தமக்குரிய பங்களிப்புச் செய்யலாம்.

- தோழர் தியாகுவின் அணிந்துரையிலிருந்து.