கனவு மெய்ப்படும் (சந்தியா பதிப்பகம்)
எஸ்ஸார்சி எழுதிய கனவு மெய்ப்படும் - சமூகப் பிரச்சனைகள், கிராமப்புற வாழ்க்கை மற்றும் மனித நேயமற்ற நிகழ்வுகளைப் பேசும் நாவல். புரட்சிகர மாற்றத்திற்கான ஏக்கத்தை உணர்த்துகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 226 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
Description
சமூகப் பிரச்சனைகளிலிருந்து சாதாரண மக்களை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல; கிராமப்புற வர்ணாச்ரம அடக்கு முறைகள் தொடர்ந்து உயிர்ப்போடு நிலவுகின்றன;
மாற்றம் என்பது வெகு எளிதில் கிட்டி விடுவதில்லை; நிகழ் அரசியலில் அறம் நீங்கி தன்னிருப்பு மட்டுமே நிற்கின்ற அவலம் தொடர்கின்றது. இந்தச் சூழலில் புரட்சிகர மாற்றம் என்பது ஏமாற்றமே என்பதை இந்நாவல் மூலம் உணர்த்த விரும்புகிறேன்.
பிரதானமாய் இப்படைப்பு, கிராமப்புற தொன்ம வழிவந்த தொழிலாளர்களின் சோகம் பற்றிப் பேசுகிறது; முடிதிருத்தும் கலைஞனும், துணி வெளுக்கும் தொழிலாளியும்
சந்திக்கின்ற மனித நேயமற்ற அன்றாட நிகழ்வுகளை முன்னிறுத்துகிறது.