Skip to content

நினைவின் தாழ்வாரங்கள்

கலாப்ரியா எழுதிய நினைவின் தாழ்வாரங்கள் - குடும்ப வீழ்ச்சி, கவித்துவமான வாழ்வு அனுபவங்கள் நிறைந்த சுயசரிதை. எஸ்.ராமகிருஷ்ணன் பாராட்டும் இந்நூல், இலக்கிய விரும்பிகளுக்கு ஒரு சிறந்த படைப்பு.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 384
Year 2009
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

வாழ்வின் துயரங்களைக் கேலி செய்யத் தெரித்தவனே உயர்ந்த கலைஞனாகிறான். அப்படித் தன் குடும்பத்தின் வீழ்ச்சியை, வேதனைகளை எழுதும்போதுகூடக் கலாப்ரியாவிடம் சுயஎள்ளலைக் காணமுடிகிறது. அந்தச் சிரிப்பை வாசித்து முடிக்கையில், மனம் ஆழ்ந்த துயரையே அடைய நேரிடுகிறது. தன்னைச் சுற்றிய தினசரி வாழ்விலிருந்து அவரது கவித்துவம் எப்படி உருவாகியது என்பதற்கு நிறைய உதாரணங்களை இந்த நூலில் காணமுடிகிறது. இவ்வளவு வெளிப்படையாகத் தனது அந்தரங்களைப் பகிர்ந்து கொண்ட கவி வேறு யாருமில்லை. கவிஞர் கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ என்னும் இந்த நூலை இலக்கிய வாசகர்களும் கவிஞர்களும் அவசியம் வாசிக்கவேண்டும்.

- எஸ். ராமகிருஷ்ணன்