கடைசி வானத்துக்கு அப்பால்
ஏகாதிபத்தியம், காலனித்துவம் குறித்த கவிதைகள், கதைகளின் மொழிபெயர்ப்பான கடைசி வானத்துக்கு அப்பால் - சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைக்கான குரல்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 344 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
ஏகாதிபத்திய, காலனிய, இனவாத, சாதிய பாலியல் ஒடுக்குறைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடிய,போராடி வருகின்ற பிற மாநில, பிற நாட்டு மக்களின் வெற்றிகள், தோல்விகள், துக்கங்கள், துயரங்கள், ஏக்கங்கள், சலிப்புணர்வு, பரிவு, பாசம், காதல், வெறுப்பு – அனைத்துமே நமக்கும் சொந்தமானவைதான். அவற்றை வெளிப்படுத்தும் கவிதைகள்,கதைகள் போன்ற புனைவிலக்கியப் படைப்புகள்,புனைவிலக்கியம் அல்லாத எழுத்துகள் ஆகியவற்றின் மொழியாக்கங்கள் நமது கூருணர்வுகளை ஆழப்படுத்துகின்றன. நமது அறிவின் வீச்சையும் எல்லைகளையும் விரிவுபடுத்துகின்றன.வெவ்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்களிடையிலான ஆன்மிகப் பாலமாக , புதிய தூண்டுதல்களாக அமைகின்றன.
இந்த உண்மைக்குச் சான்றாக உள்ளவை இத் தொகுப்பிலுள்ள 151 கவிதைகளின் தமிழாக்கங்கள்.