Skip to content

கலாப்ரியா கவிதைகள் (முதல் தொகுதி )

கலாப்ரியா எழுதிய கலாப்ரியா கவிதைகள் (முதல் தொகுதி) - நவீன கவிதைகள், தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்புகள், மற்றும் கவிஞர் கலாப்ரியாவின் தனித்துவமான பாணியை அனுபவியுங்கள்.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 296
Year 2010
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

புதுக் கவிதை வரலாற்றில் மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கிய வரலாற்றுப் பக்கங்களிலும் கலாப்ரியா ஒரு தவிர்க்க முடியாத அத்தியாயம். ஒரு வகையில் தீரா நதி. ஒரு வகையில் நகல் செய்ய முடியாத ஒரு வெளிச்சம். பின்தொடரமட்டுமே முடியும். எல்லாத் தீவிரமான படைப்புக்களும் கோருகின்ற தீவிரமான பின்தொடரல் அது. - வண்ணதாசன் நவீன தமிழ்க்கவிதையின் ஒரு அசல் முகம் கலாப்ரியா. மிக மிக இயல்பான நிகழ்வுகளை சராசரியான எளிய மொழியில் சொல்வது மட்டுமல்ல. அதன் அந்தரங்கத்தில் அணுத்தெறிப்பான ஓர் அவலம் வெடித்துத் திறப்பதிலும் கலாப்ரியாவின் கலை நுட்பமாகிறது.

- கவிஞர் சிற்பி. பாலசுப்ரமணியம்