ஏழிளந்தமிழ்
நீதி நூல்கள்
ஔவையார் எழுதிய ஏழிளந்தமிழ் - பண்டைய தமிழ் இலக்கியத்தின் நீதிநெறி விளக்கங்கள், வாழ்க்கை தத்துவங்கள் மற்றும் அழியாத கருத்துக்களைக் கொண்ட பொக்கிஷம்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 96 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
Description
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்?
வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; - மன்று ஓரம் சொன்னார் மனை.
மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, தேனின் கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல், - பத்தும் பசி வந்திடப்போம் பறந்து.
- ஔவையார்