Skip to content

இந்தியப் பயணக் கடிதங்கள்

எலீஸா ஃபே எழுதிய இந்தியப் பயணக் கடிதங்கள் - இந்தியாவின் சாகசங்கள், கலாச்சாரம் மற்றும் அன்றைய வாழ்க்கை அனுபவங்களை இந்நூல் விவரிக்கிறது. பயணக் குறிப்புகள் நிறைந்த ஒரு சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 288
Year 2016
Format Paperback
Tags Adventure and Exploration

Description

இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டால் ஒரு மகாராணியைப் போல வாழலாம் என்று இங்கு வந்திறங்கிய ஆங்கிலேயப் பெண்களில் எலிஸா ஃபே ஒருவர். கள்ளிக்கோட்டையில் வந்தவுடனேயே சிறைபிடிக்கப்பட்ட எலிஸா ஃபே, சந்தித்த கொடூரமான மனிதர்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள், சாகசங்கள் என விரிகிறது எலிஸாவின் பயண அனுபவங்கள்.

கள்ளிக்கோட்டையிலிருந்து விடுதலையாகி கொச்சி, சென்னை நகரங்களில் தங்கியிருந்துவிட்டு இறுதியாக கல்கத்தாவுக்குச் சென்று தன் கணவருடனான மணஉறவை விலக்கிக் கொண்டு இங்கிலாந்து திரும்புகிறார் எலிஸா. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக பாய்மரக் கப்பலில் இங்கிலாந்திலிருந்து தனது கணவருடன் எலிஸா மேற்கொண்ட ஒரு வருடத்திற்கும் மேலான சாகசமிக்க கடற்பயண அனுபவக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல்.