Skip to content

எஞ்சிய சொல்

முன்னுரைகள் | விமர்சனங்கள்

ஆதவன் தீட்சண்யா எழுதிய எஞ்சிய சொல் - வாழ்வின் விமர்சனத்தையும், இலக்கியத்தின் ஆழத்தையும் தேடும் ஒரு சிறந்த புத்தகம். புதிய சிந்தனைகள் மற்றும் வாசிப்பு அனுபவம்!

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2017
Format Paperback
Tags Philosophy and Thought

Description

அச்சாவதற்கு முன்பு ஒரு நூலைப்பற்றி ஏதேனும் எழுதிச் சேர்த்துவிட்டால் அது முன்னுரை --/ அறிமுகவுரை / அணிந்துரை, அச்சான பிறகு எழுதினால் அது விமர்சனம் என்று இங்கு நிலவும் கேலியை முழுமையாக புறக்கணித்துவிட முடியாது. முன்னுரையில் எழுத்தாளர் தரப்புபோல (தரப்பாகவே அல்ல) வாசகரிடம் கோடுகாட்டி நகர வேண்டியிருக்கிறதென்றால், விமர்சனத்தில் அப்பட்டமாக வாசகர் தரப்பாகவே மாறவேண்டியிருக்கிறது. வாழ்வைப் பற்றிய விமர்சனம்தான் இலக்கியம் என்றால் அந்த இலக்கியம் எவ்வாறு வாழ்வைப் பேசியிருக்கிறது என்று பரிசீலிப்பதையே நான் விமர்சனமாக புரிந்துகொண்டிருக்கிறேன்.

- ஆதவன் தீட்சண்யா