Skip to content

எனக்கெனப் பொழிகிறது தனி மழை

பிருந்தா இளங்கோவன் எழுதிய எனக்கெனப் பொழிகிறது தனி மழை - அழகான கவிதைகள், நினைவுகள் மற்றும் அன்பை வெளிப்படுத்தும் கவிதைத் தொகுப்பு. வாசிப்பு அனுபவம் சிறப்பானது.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2022
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

‘எனக்கெனப் பொழிகிறது தனி மழை’ என்ற அழகான தலைப்பில் என் வாசிப்பு முற்றத்தில் கவித்தூறல் கொட்டிப் போயிருக்கிறது பிருந்தா என்னும் புது மேகம். பிருந்தாவின் கவிதைகளின் அடிநாதம் என்பது ‘அடிநாட்களின் அன்பும், நினைவுகளும்’ என்று சொல்லி விடலாம். அதுவே எனக்கு அவரை என் மனதுக்கு நெருக்கமானவராக ஆக்குகிறது.

- கவிஞர் கலாப்ரியா

இவரது பல கவிதைகள், பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன. ஆறு கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது ஒரு சிறப்பம்சம்.டாக்டர் பிருந்தா என்பதை விடவும் கவிஞர் பிருந்தா என்பது தானே கூடுதல் சிறப்பு!

- எழுத்தாளர் நாறும்பூநாதன்

எளிமையான இக்கவிதைகளில் இருந்து 90களுக்குப் பிறகான ஆகச்சிறந்த பெண் கவிகளிடம் பிருந்தாவிற்கென ஒரு பாதை கிட்டும் என்றே கருதுகிறேன்.

- கவிஞர் கண்டராதித்தன்