Skip to content

கரூர் சதி வழக்கு கிருஷ்ண சுவாமி சர்மா

முத்துக்குமார் எழுதிய கரூர் சதி வழக்கு கிருஷ்ண சுவாமி சர்மா - தேசப்பற்று, சுதந்திரப் போராட்டம் மற்றும் கிருஷ்ண சுவாமி சர்மா அவர்களின் வீர வரலாற்றை அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Autobiography
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

மறதி என்பதே நியதியாக மாறிவிட்ட காலகட்டத்தில், நம் தேசத்தாரால் கவனிக்கப்படாமலே போய்விட்ட வீரசுதேசி ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நூல் இது.
கிருஷ்ண சுவாமி சர்மா பற்றி...

"பகவத் கீதையை மனனம் செய்திருக்கிறார். வாழ்க்கை முழுதும் பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடிப்பது. சத்தியம், அஹிம்சை, சேர்த்து வையாமை, திருடாமை ஆகிய பிரதிக்ஞைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார். முற்றிலும் நாட்டின் தொண்டிற்காகவே தம்மை அர்ப்பணிக்க விரும்புகிறார்"
-மகாத்மா காந்தி

"நமது சர்மா மாணவராக இருக்கும்பொழுதே தேச சுதந்திரத்தில் நாட்டம் உடையவராய் தமது வாலிபகாலத்திற்கு முன்பே தியாகத்தின் வாயிலாய்ச் சிறைவாசம் ஏற்றார். சிறைச்சாலைக் கைதிகளை இக்காலத்தைப் போலல்லாது கொடுமையாகவும், இழிவாகவும் நடத்தி வந்த காலமாகிய 1908 ஆம் ஆண்டிலேயே மாதக் கணக்கில்லாமல் வருடக் கணக்காய் தண்டனை அடைந்தார்"
-தந்தை பெரியார்

"சிறைபுகு செல்வம் நாவடைப் பரசால் மேவிய போதும் மனத்திடைப் பாரத இனத்தை வழுத்தி எழுத்திடைச் சேவை செழித்த செம்மல்...
ஆன்றநூல் பல ஆக்கிய அறிவு தேக்கிய நட்பு சமரச நோக்கே அமரு நேயம் பொருட்டொர் பின்றிவாழ் கிருட்டிணசாமி சன்மனெனும் பெயர் கன்ம யோகி".
-திரு.வி.க.

"அஞ்சாத நெஞ்சினர். வயது இருபத்தைந்து ஆகு முன், நாலாண்டுகள் உடற் சிறையும், ஓராண்டு காச்சிறையும் பெற்றுத் திகழ்ந்த தேசாபிமானி.
-அ.மாதவய்யா