திருக்குறள் யாப்பியல்
ப. திருஞானசம்பந்தம் எழுதிய திருக்குறள் யாப்பியல் - திருக்குறளின் யாப்பிலக்கணத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் சிறந்த ஆய்வு நூல். யாப்பியல் அறிவை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர்களுக்குப் பயனுள்ள புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge |
Description
என் இளைய நண்பரும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியருமான ப.திருஞானசம்பந்தம் திறன்மிகு ஆய்வாளர். 'எழுத்தும் சொல்லும் பொருளும்' ஒப்ப நாடி எழுதும் இயல்பினர். இலக்கியவாணரான இவர் இலக்கணத்தில் குறிப்பாக யாப்பியல் ஆய்வில் கூடுதல் நாட்டம் கொண்டவர். புலமை மிக்கவர். இதற்கு முன்னர் இவர் எழுதிய நூல்கள் சில இதற்குச் சான்று பகரும் தகுதி சான்றவை. இப்போது இவர் 'திருக்குறள் யாப்பியல்' என்னும் தலைப்பில் ஆறு கட்டுரைகள் அடங்கிய நூலொன்றினை எழுதியிருக்கிறார். ஆய்ந்தாய்ந்து எழுதிய அறுசுவைக் கட்டுரைகள் இவை. இவற்றை நெட்டோட்டமாகப் படித்தல் கூடாது. நின்று நிதானித்து மெல்ல மெல்லப் புரிதலுடன் படித்து முடித்தவர்க்கே பயன்கிட்டும். யாப்பிலக்கணத்தில் பலருக்கு எட்டாக் கனியாய் உள்ளவற்றை எட்டிப்பறித்துத் தரும் பாங்கில் இந்நூலை அவர் எழுதியிருக்கின்றார்.
- பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்