Skip to content

விருப்பமில்லா திருப்பங்கள் (கிழக்கு பதிப்பகம்)

சுஜாதா எழுதிய விருப்பமில்லா திருப்பங்கள் - வாழ்க்கையின் எதிர்பாராத சவால்களையும், திருப்பங்களையும் உணர்த்தும் ஒரு நாவல். குடும்பம் மற்றும் நட்பு உறவுகளின் முக்கியத்துவத்தை அறியலாம்.

Category Novel
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 95
Year 2011
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

'விருப்பமில்லா திருப்பங்கள்' மாத நாவலாக வெளிவந்தது. கதையின் நாயகன் செல்வம் நல்லவன். படிப்பில் கெட்டிக்காரன். தேர்வு நாளின்போது சக மாணவன் ஒருவனுக்கு உதவி செய்யப்போய் அநியாயமாகத் தண்டிக்கப்படுகிறான். படிப்பு நின்றுபோய் அவனது வாழ்க்கையில் முதல் விருப்பமில்லாத் திருப்பம் நிகழ்கிறது. அவன் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த தாய் இறந்து போகிறாள். அதன் பிறகு தப்புத் தப்பாகவே, கூடா நட்பும், போதை மயக்கமுமாக விருப்பத்துக்குரிய திருப்பம் ஒன்றுமே நிகழாமல் போய் மீள முடியாத சுழலில் சிக்கிக் கொள்கிறாள்.