Skip to content

மகாபாரதம்: மாபெரும் விவாதம்

பழ. கருப்பையா எழுதிய மகாபாரதம்: மாபெரும் விவாதம் - மகாபாரதத்தின் ஆழமான புரிதல் மற்றும் புதிய கண்ணோட்டங்கள் நிறைந்த ஒரு சிறந்த ஆய்வு நூல்.

Category Essay
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 312
Year 2014
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்த நூல் சிந்தனைச் செல்வர் பழ.கருப்பையா யார் என்பதை முழுதும் எடுத்துக்காட்டும் ஆய்வுக் களஞ்சியம்!

- தமிழண்ணல்

வேதவியாசனே பிறந்து வந்து படித்துப் பார்த்தால், ‘அட, இப்படி யெல்லாம்கூட நான் படைத்த கதாபாத்திரங்களுக்கு வியாக்கியானம் தர முடியுமா?’ என ரசித்துப் பாராட்டுவார். இது முகஸ்துதியல்ல!

- ‘தினமணி ஆசிரியர்’ கே. வைத்தியநாதன்

கற்றறிந்தோர் இந்நூலை மிகவும் ரசிப்பர்; போற்றிப் பாதுகாப்பர்!

- பத்ரி சேஷாத்ரி

பழ. கருப்பையா சில சினிமா படங்களைத் தயாரித்திருக்கிறார்; நடிக்கவும் செய்திருக்கிறார்! பழுத்த தேசியவாதி; ஆனால் தமிழுணர்வு மிகுந்தவர்; இலங்கைப் பிரச்சனையில் அவருக்கும் எனக்கும் கருத்து மாறுபாடு வரும்!

நல்ல பேச்சாளர்; அதே மாதிரி எழுதவும் செய்வார்! ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. க்களில் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார்!

அவரிடம் இருக்கும் நேர்மை நெருப்பைப் போன்ற நேர்மை!

- ‘துக்ளக்’ சோ (குமுதம் 12.03.2014)