Skip to content

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு

எளிய தமிழில், அழகு நடையில் ஒரு நவீனக் காப்பியம்

தாழை மதியவன் எழுதிய நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு - இஸ்லாம் மதத்தின் தோற்றம், நபிகள் நாயகத்தின் வாழ்க்கை மற்றும் இஸ்லாமியக் கொள்கைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Autobiography
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Year 2014
Format Paperback
Tags Faith and Spirituality

Description

உலகின் இரண்டாவது பெரிய மதமும் அதி வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் முக்கியச் சமயமுமான இஸ்லாத்தின் கடைசி இறைத் தூதர், முகமது நபி.

அமைதியின் பேருருவமும் கருணையின் வடிவமுமான நபிகளின் ஆச்சரியமூட்டும் வாழ்வையும் பிரமிக்கவைக்கும் பங்களிப்பையும் இந்தப் புத்தகம் கண்முன் கொண்டு வருகிறது.

நபிகளின் வாழ்வினூடாக இஸ்லாத்தின் தோற்றம், வளர்ச்சி, உயர்ந்த நோக்கங்கள் என்று அனைத்தையும் சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்துகிறார் தாழை மதியவன்.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்னமும் உலகம் முழுவதிலும் உள்ளவர்களால் இஸ்லாமும் அதன் கொள்கைகளும் ஆராதிக்கப்படுவது ஏன் என்பதற்கான விடை இதில் தெளிவாக உள்ளது.

உயிர்கள் அனைத்தின்மீதுமான அன்பும் நேசமும் சகோதரத்துவமும்தான் இஸ்லாத்தின் அடிநாதம் என்பதை நபிகளின் வாழ்வும் வாக்கும் தெள்ளத்தெளிவாக உணர்த்துகின்றன.