Skip to content

இந்திய சீனப் போர்

India's China War நூலின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு

நெவில் மாக்ஸ்வெல் எழுதிய இந்திய சீனப் போர் - 1962 போர் பின்னணி, காரணங்கள் மற்றும் சர்ச்சைகளை ஆழமாக அலசும் வரலாற்றுப் புத்தகம். இந்திய சீன உறவுகள் குறித்த முக்கிய ஆய்வு.

Category History
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 416
Year 2017
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சர்ச்சைக்குரிய போர். கடும் விமர்சனங்களையும் விவாதங்களையும் எழுப்பிக் கொண்டிருக்கும் புத்தகம். நடுநிலையுடன் பதிவுசெய்யப்பட்ட போர் ஆவணம். முதல் முறையாகத் தமிழில்.

இந்திய வரலாற்றில் இன்றுவரை சர்ச்சைக்குரிய ஆண்டாக 1962 நீடிக்கிறது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய சீனப்போர் ஏன் தொடங்கியது? ஏன் இந்தியர்களால் சீனாவை வெல்லமுடியவில்லை? இது நேருவின் தவறா? பிரிட்டிஷார் காலத்தில், குத்துமதிப்பாக வரையறை செய்யப்பட்ட ஒரு எல்லைக்கோட்டை அதனிடமிருந்து விடுதலை பெற்ற இந்திய தேசம் அப்படியே பின்பற்றலாமா? வாருங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம் இது சீனாவின் நிலைப்பாடு. இந்திய சீன எல்லை காலாகாலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. ஏற்கெனவே தெளிவாக வரையறை செய்யப்பட்டுவிட்டது. எந்தப் பேச்சுவார்த்தைக்கும் மறு பரிசீலனைக்கும் இடம் இல்லை. இதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. இந்தியா எந்த அடிப்படையில் அப்படிக் கறாராகச் சொன்னது? கைலாசம் என்பது இந்துக்களின் இந்தியர்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த விஷயம் என்பது மட்டுமே இந்தியா உரிமை கோரும் பகுதிகளுக்கான நியாயத்தை வழங்கிடமுடியுமா? இந்தியத் தரப்பில் வேறு என்னென்ன நியாயங்கள் உண்டு?