Skip to content

ஒல்லி பெல்லி

டாக்டர் கு. கணேசன் எழுதிய ஒல்லி பெல்லி - உடல் எடை குறைப்பதற்கான காரணங்கள், தீர்வுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான வழிகாட்டி. உடல் பருமன் பிரச்சனையைத் தீர்க்க உதவும்!

Category Manual
Publisher கிழக்கு பதிப்பகம்
Language தமிழ்
Pages 112
Year 2018
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

உடல் குண்டாக இருக்கிறதே என கவலைப் படுபவர்களுக்கும், உடல் ஒல்லியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கும் ஏற்ற நுால் இது. மருத்துவ வார்த்தைகளை முடிந்த அளவு குறைத்து, ஒல்லி எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி எழுதுவதில் வல்லவர் டாக்டர் கு.கணேசன்.

இந்த புத்தகமும் அப்படியே அவரது எளிமையான எழுத்தில் வெளிவந்துள்ளது. உடல் பருமனுக்கான காரணங்கள், அதற்கான தீர்வுகள், உடல் பருமன் ஏற்படுத்தும் விளைவுகள் என பல விஷயங்களையும் ஆராய்ந்து, 23 தலைப்புகளில் தந்துள்ளார். நுாலின் முன்னுரையில் டாக்டர் கு.கணேசன் இவ்வாறு எழுதியுள்ளார். என்னை பொறுத் தவரையில் அடுத்தவருக்கு ஆலோசனை சொல்வதற்கு முன் அதை நம்மால் பின்பற்ற முடியுமா? என்று யோசிப்பவன்.இந்நுாலில் உங்களுக்கு என்ன ஆலோசனை சொல்லியிருக்கிறேனோ அவற்றை பின்பற்றி, ஆறு மாதங்களில் என் உடலில், 8 கிலோ எடையை குறைத்திருக்கிறேன்' என்று எழுதியுள்ளார்.