குறுநிலத் தலைவர்கள்
வே.பார்த்திபன் எழுதிய குறுநிலத் தலைவர்கள் - தமிழக வரலாற்றின் மறுபக்கத்தை அறிய, சிற்றரசர்கள், வேளிர்கள் ஆட்சி, நிர்வாகம் குறித்த தகவல்களைப் பெறுங்கள்.
| Category | History |
|---|---|
| Publisher | கிழக்கு பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது மூவேந்தர்களான சேரர், சோழர், பாண்டியர்களும் பல்லவர்களும் மட்டுமே. ஆனால் இவர்களுக்குக் கீழ் சிற்றரசர்கள் என அறியப்பட்ட ஏராளமான வேந்தர்கள், வேளிர்கள், சீறூர் தலைவர்கள் தமிழக நிலபரப்பை ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் பற்றிய ஓர் அறிமுகத்தை தருகிறது இந்த நூல்.
சங்க காலம் தொடங்கி, விஜயநகர பேரரசு வரை தமிழகத்தில் ஆட்சிபுரிந்த குறுநிலத் தலைவர்களின் வரலாற்றை இலக்கிய, கல்வெட்டு ஆய்வுகளின் அடிப்படையில் விளக்குகிறார் ஆசிரியர் வே.பார்த்திபன். இந்தக் குறுநிலத் தலைவர்களின் நிர்வாகத் திறமைகள், அவர்கள் நிகழ்த்திய போர்கள், மேற்கொண்ட தியாகங்கள், ஊர் மக்களுக்கு அளித்த தானங்கள், கட்டியெழுப்பிய கோயில்கள் எனத் தமிழர் வாழ்வின் சுவடுகளை ஒவ்வொரு பக்கத்திலும் காணலாம். குறுநிலத் தலைவர்களுக்கும் பேரரசுகளுக்கும் இடையிலான பந்தம், பகை, அதிகாரப் படிநிலை ஆகியவை ஒவ்வொரு ஆட்சியிலும் எவ்வாறு மாறின, இறுதியாக அவர்கள் எப்படி மன்னர்கள் என்ற அந்தஸ்தை இழந்து சாமானிய மனிதர்களுடன் கலந்தார்கள் என்கிற விவரங்களும் இடம்பெறுகின்றன.
தமிழக வரலாற்றின் மற்றொரு கோணத்தை அறிய விரும்பும் வாசகர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல் இது.