இந்துத்துவப் பாசிசம்: வேர்களும் விழுதுகளும்
மு. செந்திலதிபன் எழுதிய இந்துத்துவப் பாசிசம்: வேர்களும் விழுதுகளும் - இந்துத்துவம், பாசிசம் மற்றும் இந்திய தேசிய அடையாளம் குறித்த ஆழமான ஆய்வு. அரசியல் புரிதலை மேம்படுத்தும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Hardcover |
| Tags | History, Politics, and Culture |
Description
இந்தியா எனும் வரைபடத்தை உருவாக்கி அதனை ஒரே நிலப்பரப்பாக காட்டி, துப்பாக்கி முனையில் இந்நாட்டைக் கட்டி ஆண்டவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தியா வரலாற்றில் ஒருபோதும் ஒரே நாடாக என்றைக்கும் இருந்தது இல்லை என்பதுதான் நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றது. இந்தியாவுக்கு என்று தேசிய அடையாளம் (National Identity) என்று ஏதாவது இருக்கிறதா? எப்போதும் இருந்தது இல்லை; இனி எப்போதும் அத்தகைய அடையாளத்தை உருவாக்கவும் முடியாது; ஏனெனில், நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா 1962இல் முழங்கியது போல, இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம்.